தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் கொண்டாட, கீழே கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றுங்கள்.
குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்கும்போது பெரியவர்களின் கண்காணிப்பில் மட்டுமே வெடிக்க வேண்டும்.
அவசரநிலைக்கு ஒரு வாளி தண்ணீர் அல்லது தீயணைப்பு கருவியை அருகில் வைத்திருக்கவும்
பட்டாசு வெடிக்கும்போது கண்களை பாதுகாக்க பாதுகாப்பு கண்ணாடி மற்றும் பருத்தி ஆடைகளை அணியுங்கள்.
வெடிக்காமல் போன பட்டாசுகளை மீண்டும் தீ வைத்து வெடிக்க முயற்சிக்க வேண்டாம்.
மின்கம்பிகள், வாகனங்கள் மற்றும் எளிதில் தீப்பற்றும் பொருட்கள் இல்லாத திறந்த வெளியில் பட்டாசுகளை வெடிக்கவும்.
வெடித்த பட்டாசுகளை தண்ணீரில் நனைத்து பாதுகாப்பாக அப்புறப்படுத்துங்கள்..